• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

கோவை வி.ஜி.எம் மருத்துவமனையில் ‘லிவர் பிளாக்..,

BySeenu

Jul 24, 2025

கோயம்புத்தூரில் உள்ள வி.ஜி.எம் மருத்துவமனை அதன் தனி ‘லிவர் பிளாக்கில்’, உலக தரம் வாய்ந்த கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கூடத்தை உருவாக்கியுள்ளது. இந்த புதிய நிலையம் இன்று விர்ஜீனியா காமன்வெல்த் பல்கலைக்கழகத்திலிருந்து வருகை தந்த பேராசிரியர் டாக்டர் அருண் சன்யால் அவர்களால் திறக்கப்பட்டது.

• இந்தியாவில் கல்லீரல் நோயால் பாதிக்கப்படும் மக்கள் இரண்டரை முதல் மூன்று கோடி வரை..
• ஆண்டுதோறும் 50,000க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் தேவைப்படுகிறது.
• ஆனால், தற்போது 3,500 முதல் 4,000 மாற்றுகள் மட்டுமே நடைபெறுகின்றன.
• இந்தியாவில் உள்ள மாற்று மையங்கள் 100க்கும் குறைவாகவே உள்ளன – பெரும்பாலும் பெரிய நகரங்களில் மட்டுமே உள்ளன. இது தேவை மற்றும் கிடைக்கும் சேவை இடையிலான பெரும் பற்றாக்குறையை காட்டுகிறது.

மேலும் பேராசிரியர் டாக்டர் அருண் சன்யால் பேசுகையில், “இந்தியா இன்று கல்லீரல் நோய்களில் ஒரு திருப்புமுனையில் உள்ளது.வி.ஜி.எம் மருத்துவமனை போன்ற நிறுவனங்கள் மக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் முக்கிய பங்காற்றுகின்றன.” என்று தெரிவித்தார்.

மேலும் டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத், தலைவர் மற்றும் முதன்மை வயிற்று நோய் நிபுணர் பேசுகையில், “இது வெறும் அறுவை சிகிச்சை கூடம் அல்ல. இது ஒரு தொலைநோக்குடன் உருவாக்கப்பட்ட தளம் . மலிவான செலவில் உலக தரம்சேர்ந்த பராமரிப்பு, ஆய்வு, பயிற்சி மற்றும் ஆரம்ப கட்ட நோய் கண்டறிதல் ஆகியவற்றைக் கொண்டது.” பெரும்பாலான மாற்று மையங்கள் மெட்ரோ நகரங்களில் உள்ளன. வி.ஜி.எம் மருத்துவமனை, தமிழ்நாடு மற்றும் அதன் அருகிலுள்ள மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்கு இந்த முக்கிய சிகிச்சையை வழங்கும் மையமாக இருக்கும், என்று தெரிவித்தார்.

வி.ஜி.எம் மருத்துவமனையின் எண்டோஸ்கோபி துறையின் இயக்குனர்கள் டாக்டர் மதுரா பிரசாத், டாக்டர் வம்சி மூர்த்தி, ஹெப்பாட்டோலாஜி துறை சிறப்பு நிபுணர் டாக்டர் மித்ரா மற்றும் ஆர்த்தோ அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.