• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

Byவிஷா

Jan 31, 2023

நற்றிணைப் பாடல் 105:

முளி கொடி வலந்த முள் அரை இலவத்து
ஒளிர் சினை அதிர வீசி விளிபட
வௌ; வளி வழங்கும் வேய் பயில் மருங்கில்
கடு நடை யானை கன்றொடு வருந்த
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண்
அருஞ் சுரக் கவலைய என்னாய் நெடுஞ் சேண்
பட்டனை வாழிய நெஞ்சே குட்டுவன்
குட வரைச் சுனைய மா இதழ்க் குவளை
வண்டு படு வான் போது கமழும்
அம் சில் ஓதி அரும் படர் உறவே

பாடியவர்: முடத்திருமாறன்
திணை: பாலை

பொருள்:

முள் போன்ற நிழல் கொண்ட இலவ-மரத்தில் காய்ந்த கொடிகள் சுற்றிக்கொண்டுள்ளன. அது அதிரும்படியும், மூங்கில் சாயும்படியும் கொடிய காற்று வீசுகிறது. இந்த வழியில் கடுமையாக நடக்கும் யானை தன் கன்றுகளுடன் வருந்துகிறது. நெடுந்தொலைவு நீரோ, நிழலோ இல்லை. இத்தகைய கொடிய காட்டுவழி என்று எண்ணாமல் நெடுந்தொலைவு வந்துவிட்டாய். நெஞ்சே! குட்டுவன் ஆளும் (கொல்லிக்)குடவரையில் இருக்கும் சுனையில் வண்டுகள் மொய்க்கும்படிப் பூத்துக்கிடக்கும் வெண்குவளை மலர் மணக்கும் கூந்தலை உடையவள் அவள். அவள் துன்புறும்படி விட்டுவிட்டு நெடுந்தூரம் வந்துவிட்டாயே! இனி என்ன செய்யப் போகிறாய்?  என்று பொருளீட்டச் செல்லும் தலைவன் வழியில் தன் நெஞ்சைக் கேட்கிறான்.