• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை மாவட்டத்தில் மதுபானக் கடைகள் மூடல்…

ByKalamegam Viswanathan

Oct 24, 2024

மருது சகோதரர்களின் 223-வது நினைவு தினத்தை முன்னிட்டு, 23.10.2024 அன்று பிற்பகல் 06.00 மணி முதல் 24.10.2024 வரை குறிப்பிட்ட மதுபானக்கடைகள் மற்றும் FL2 உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருது சகோதரர்களின் 223-வது நினைவு தினத்தை முன்னிட்டு, திருப்பத்துார் பகுதியில் இயங்கும் டாஸ்மாக் மது
பானக்கடைகள் (மதுபானக்கடை எண்:7571, 7740, 7573), மானாமதுரை பகுதியில், இயங்கும் டாஸ்மாக் மதுபானக்கடைகள் (மதுபானக்கடை எண்:7541, 7542, 7544, 7669, 7663, 7680, 7736) மற்றும் எப்.எல்.2.தி/ள்.கிங்ஸ் ரெக்கிரியேஷன் கிளப், திருப்புவனம் பகுதியில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக்கடைகள் (மதுபானக்கடை எண்:7674, 7675, 7547, 7682 மற்றும் 7670) மற்றும்தி/ள்.ஸ்டார் ரெக்கிரியேஷன் கிளப், தி/ள் வைகை ஸ்போர்ட்ஸ் கிளப், மடப்புரம், திருப்பாச்சேத்திஅரசு மதுபானக்கடை எண்: 7664, பூவந்தி அரசு மதுபானக்கடை எண்:7615, சிவகங்கை டவுன் பகுதியில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக்
கடைகள் (மதுபானக்கடை எண்:7514,7552,7556,7577 மற்றும் 7714) மற்றும் 7 ஸ்டார் விளையாட்டு நற்பணிமன்றம், நேரு பஜார், சிவகங்கை, மதகுபட்டி பகுதியில், இயங்கும் டாஸ்மாக்மதுபானக்கடைகள் (மதுபானக்கடை எண்:7703,7705) ஆகிய மதுபானக்
கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்கள் முழுவதுமாக 23.10.2024 அன்று பிற்பகல் 06.00 மணி முதல் 24.10.2024 வரை முழுவதுமாக மூடப்படும் என மாவட்டஆட்சித்தலைவர் ஆஷாஅஜித் தெரிவித்துள்ளார்.