தமிழக அரசு மூன்றாவது அலை காரணமாக பொதுமக்களின் நலன் கருதி கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் இரவு 10 மணி முதல் 5:00 மணி வரையும் மற்றும் ஞாயிறு முதல் முழு ஊரடங்கு உத்தரவு ஆணை பிறப்பித்திருந்தார். இதையடுத்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநகரத்தினம் உத்தரவின் பேரில், பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி அறிவுறுத்தலின்படி போலீசார் இரவு வாகன ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், முழு ஊரடங்கான இன்று, கோவை உடுமலை சாலை கெடிமேடு பகுதியில் அரசு உத்தரவை மீறி அரசு மதுபானக்கடை பின்புறம் சாக்கு மூட்டைகளில் மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்று வருகின்றனர். தற்போது மது விற்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.