• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

டாஸ்மாக் கடை மூடியது தெரியாமல் சரக்கு வாங்க காத்திருக்கும் மதுப்பிரியர்கள்..,

BySeenu

May 16, 2026

கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தமிழக அரசு தமிழக முழுவதும் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் 717 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடுவதற்கு உத்தரவிட்டது அதன்படி கோவை மாவட்டத்தில் 69 கடைகளை மூடுவதற்கு உண்டான பணிகளை டாஸ்மாக் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வந்தனர்.

அதில் ஒரு பகுதியாக ரயில் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை நேற்று மூடியுள்ளனர். அது தெரியாமல் இன்று ஏராளமான மது பிரியர்கள் கடைக்கு முன்பாக நின்று கொண்டு எப்போது கடை திறக்கும் என்று காத்திருந்தனர். அருகில் இருந்த வியாபாரிகள் தற்சமயம் இந்த டாஸ்மாக் கடை மூடியதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து மீண்டும் எந்த காலத்திலும் இந்த இடத்தில் டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தினார்கள். இந்த டாஸ்மாக் கடை மூடியது எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.