கோவையில் பள்ளிகள், கல்லூரிகள் என எப்போதும் பரபரப்பாக இயங்கும் பகுதி லட்சுமி மில். இந்த லட்சுமி மில் சிக்னல் பகுதியில் உள்ள Rolling dough cafe எனும் ஐஸ்கீரிம் கடையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீடிர் சோதனை செய்து கடைக்கு சீல் வைத்தனர்.

விஸ்கி, பிராந்தி போன்ற மதுவகைகளை ஐஸ்கிரீமில் கலந்து விற்பனை செய்வதாக வந்த புகாரின் அடிப்படையில் கடையை ஆய்வு செய்தனர். மேலும், ஐஸ்கீரிம் கடையில் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. எனவே அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர்.