• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பாண்டிச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல்

Byகுமார்

Jan 21, 2024

பாண்டிச்சேரியில் இருந்து குறைந்த மதிப்புள்ள மது பாட்டில்களை கடத்தி வந்து மதுரையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவாட்டர் பாட்டில்களில் பிரித்துப் பிரித்து விற்பனை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து மத்திய நுண்ணறிவுப் பிரிவு அமலாக்க துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் பாண்டிச்சேரி இருந்து ஸ்கோடா காரில் 600 ஒரு லிட்டர் மது பாட்டில்களை விஜயன் என்பவர் கடத்தி வந்தார் . அவர் சோலை அழகுபுரத்தை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரிடம் 600 ஒரு லிட்டர் பாட்டில்களை ஒப்படைத்தார். அவர் அவரது கூட்டாளியான சுந்தர்ராஜன் என்பவருடன் சேர்ந்து ஒரு லிட்டர் பாட்டில்களை கோட்டர் பாட்டில்களில் அடைத்து அவனியாபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மாதிரி கடைகளுக்கு சப்ளை செய்துள்ளார். இவற்றைத் தொடர்ந்து கண்காணித்த இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்து கடத்தி வந்த காரையும் பறிமுதல் செய்து மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். 5 லட்சம் ரூபாய் மது பாட்டில்கள் மேலும் 85 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் 1.85 லட்சம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் பாண்டிச்சேரியை சேர்ந்த விஜயன் மதுரை சேர்ந்த முத்துப்பாண்டி சுந்தர்ராஜன் ஆகியோரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.