திண்டுக்கல் அருகில் நடந்த கொலை தொடர்பாக குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்லப்பட்டி பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நில தகராறு காரணமாக மணிகண்டன் என்பவரை கொலை செய்த வழக்கில் அவரது உறவினரான 1)திருப்பதி (56), 2)சவடமுத்து (26), 3)முனீஸ்வரன் (25), 4)புகழேந்தி (46) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று திண்டுக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மேற்கண்ட நான்கு குற்றவாளிகளுக்கும் தலா ஆயுள் தண்டனையுடன் கூடிய 4 வருடங்கள் மற்றும் 1 மாத சிறை தண்டனை மற்றும் தலா ரூ.15,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.






