• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

திருப்பூரில் விடுதலை சிறுத்தை கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

ByR. Thirukumar

Aug 5, 2024

விடுதலை சிறுத்தை கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் தலைமை தமிழ் வேந்தன் மேனாள் மாவட்ட செயலாளர் கண்டன உரை தா. பார்வேந்தன், மாநிலச் செயலாளர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுசி கலையரசன், மேனாள் மண்டல செயலாளர் எஸ். எம். எல். ஏ. சிறுத்தை வள்ளுவன் மண்டல செயலாளர் திருப்பூர் ஈரோடு தம்பி முருகானந்தம் நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் ரேவதி மகளிர் விடுதலை இயக்கம் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தா பார்வேந்தன் கூறுகையில்.., பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் குணா வி தோ 154 இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கை எஸ்சி பார் எஸ்டி சட்டத்தின் கீழ், கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்றும், காளியா தேவி வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்றும், காலியா தேவி குடும்பத்துக்கு இழப்பீடு ரூ.50 லட்சம் மற்றும் குடும்பத்தாருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு வீடு மற்றும் ஐந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும், காளிகா தேவி படுகொலைக்கு காரணமானவர்கள் மூலமாக மீண்டும் சாதிய வன்கொடுமை நடக்காமல் தடுக்கும் வகையில் திருத்த சட்டம் 2015 தீண்டாமை, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பொங்குபாளையம் கிராமத்திலிருந்து வெளியேற்ற வேண்டும். கொங்கு பாளையம் கிராமத்தை தீண்டாமை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும். கொங்கு பாளையம் கிராமத்தில் தலித்துகளுக்கு வழங்கப்பட்ட நிபந்தனை பட்டா( டிசி) நிலங்களை ஆக்கிரமித்து உள்ளவர்கள் மீது எஸ். டி. ஆர். எஸ். டி சட்டத்தின் படி கைது செய்ய வேண்டும் நிலத்தை மீண்டும் ஒப்படைத்தவர்களுக்கே வழங்க வேண்டும். காளியா தேவயின் உடன் பிறந்த சகோதரர் மு கந்தசாமி மற்றும் மணிவண்ணன் ஆகியோருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பிற்கு துபாய்க்கு வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். விழுந்த பலிகளை கணக்கெடுப்போம் விடுதலைப் போரில் வென்றெடுப்போம் என்று ஜெய் பீம் சுசீலா மகளிர் விடுதலை இயக்க வீர முழக்கங்கள் எழுப்பினார். மேலும் விடுதலை சிறுத்தை கட்சி ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.