விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா தாயில்பட்டி ஊராட்சிமண்குண்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் பா.கபிலேஷ்பாண்டியன்,மு.ஹருணியா, ரா.ரித்திகா ஆகிய மூன்று மாணவர்கள் “சிறார்கள் எழுதிய கதைகள்” என்னும் தலைப்பில்”எழுதிய கதைகள் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.. பெற்றோர்களும் பள்ளி மேலாண்ம குழு கமிட்டியினர் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்புலட்சுமி மற்றும் ஆசிரியைகள் முன்னிலையில் நடைபெற்றது.

அதற்கு தமிழக முன்னாள் உள்துறை செயலாளர் டாக்டர் இறையன்பு புத்தகம் எழுதிய மாணவ மாணவிகளையும் பள்ளியின் தலைமை ஆசிரியரையும் பாராட்டி வாழ்த்துக்கடிதம் அனுப்பி உள்ளார்.