• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

எடப்பாடியார் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க சபதம் ஏற்போம் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

ByP.Thangapandi

Jan 17, 2024

புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா ஆட்சியை எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அமைக்க சபதம் ஏற்போம் என எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

புரட்சித்தலைவர், தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழா விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கட்சி கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். அதனை தொடர்ந்து சிவகாசி, திருத்தங்களில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். விருதுநகர் மேற்கு மாவட்ட அஇஅதிமு கழகம் மற்றும் திருத்தங்கல் கிழக்கு பகுதி கழகம் சார்பாக திருத்தங்கல் எஸ்.ஆர்.என் பள்ளி எதிரில் மக்கள் திலகம் எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி அங்கு நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் இனிப்புகள் வழங்கியும் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது,

தமிழகத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சி தலைவி அம்மா அவர்கள் அள்ளிக்கொடுக்கும் தலைவர்களாக வாழ்ந்தனர். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆட்சியை, புரட்சி தலைவி அம்மா ஆட்சியை எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அமைக்க அவரது பிறந்த நாளில் சபதம் ஏற்போம். அதிமுகவை உருவாக்கிய புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் புரட்சி தலைவி அம்மா அவர்கள் செய்த சேவைதான் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. அனைத்து குக்கிராமங்களில் கூட ஏழைகளின் நெஞ்சிலே நீங்கா இடம் பிடித்திருக்கும் கூடிய தலைவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள். எம்ஜிஆரின் வழியிலே ஆட்சி நடத்தியவர்கள் தான் புரட்சித்தலைவி அம்மாவும் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமியும் என்று பேசினார்.

தொடர்ந்து விருதுநகர் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பாக விருதுநகரிலுள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சிகளில் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் கலாநிதி, விருதுநகர் மேற்கு மாவட்ட கழக துணைச்செயலாளர் சுப்பிரமணி, விருதுநகர் மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் விஜயகுமரன், விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பிலிப்வாசு, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பலராம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் முத்துப்பாண்டியன், கழக வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர் மாரீஸ்குமார், விருதுநகர் மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் செவல்பட்டி மாரிக்கனி, விருதுநகர் தகவல் தொழில்நுட்ப அணியின் நகர செயலாளர் பாசறை சரவணன் தலைமைக்கழக பேச்சாளர் சிவகாசி சின்னத்தம்பி, விருதுநகர் மேற்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் சையது சுல்தான், விருதுநகர் மேற்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ரமணா, விருதுநகர் மேற்கு மாவட்ட மருத்துவரணி செயலாளர் விஜய்ஆனந்த், சிவகாசி மாநகர பகுதிகழக செயலாளர்கள் சரவணகுமார், கருப்பசாமிபாண்டியன், சாம் என்ற ராஜா அபினேஸ்வரன், ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, லட்சுமி நாராயணன், விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை தலைவரும் மாநகராட்சி அதிமுக கவுன்சிலருமான கரைமுருகன், பொதுக்குழு உறுப்பினர் சித்துராஜபுரம் பாலாஜி, மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் கார்த்திக், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் எம்.கே.என்.செல்வம், சிவகாசி மேற்கு பகுதி வர்த்தக அணி செயலாளர் பாண்டி (எ)டேக்கர் பாண்டி , தொகுதி கணேசன், விருதுநகர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.கே.கண்ணன், விருதுநகர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தர்மலிங்கம், விருதுநகர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் மச்சராஜா, விருதுநகர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கலைவாணன், விருதுநகர் நகர கழக செயலாளர் முஹம்மது நெய்னார், விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற பொருளாளர் கோட்டைபாண்டி மற்றும் மாவட்ட ஒன்றிய நகரக் கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.