காவல்துறையால் கொல்லப்பட்ட இளைஞர் மரணம் சம்பவத்தில் முதல்வரின் துரித நடவடிக்கைக்கு காங்கிரஸ் பாராட்டு தெரிவித்தது. லாக்கப் டெத் நடக்க கூடாது என்பதே அனைவரின் எண்ணம். ஆனால் நடந்து இருக்கிறது. இது தனிமனித செயலை மீறிய செயலாக இருந்தது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியிலும், அதிகாரத்திலும் பங்கு கேட்போம் என்பதில் உறுதி. காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் பேட்டி அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கட்சியை பலப்படுத்த 5தேதி காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை, கிராம மறுசீரமைப்பு தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் வருகை தர உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் வட்டம் பெரிய நாயக்கி மண்டபத்தில் வைத்து கிராம மறுசீரமைப்பு நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.
இதற்காக குழித்துறை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் கூறியதாவது..,
லாக்கப் டெத் நடக்க கூடாது என்பதே அனைவரின் எண்ணம் ஆனால் நடந்து இருக்கிறது அது தனிமனித செயலை மீறிய செயலாக இருந்தாலும் தமிழக அரசு ஒளிவு மறைவு இல்லாமல் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுத்து உள்ளது. முதல்வர் அந்த குடும்பத்திற்கு தொலை பேசி மூலம் ஆறுதல் கூறி இருக்கிறார். அரசு வேலை நிவாரணம் வழங்கி இருக்கிறார். ஒளிவு மறைவு இல்லாமல் சிபிஐ-யிடம் தமிழக அரசு ஒப்படைத்து உள்ளனர் அதை வரவேற்கிறோம்.
சட்டமன்ற குழு தலைவர் என்ற முறையில் கடந்த காலத்தில் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. வரும் சட்டமன்ற தேர்தலிலும் கூடுதல் இடங்கள் வேண்டும் என
முன்னதாக தெரிவித்து, அகில இந்திய தலைமையிடம் வலியுறுத்தி உள்ளோம். வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளை கேட்போம். அதிகாரத்திலும், ஆட்சியிலும் பங்கு கேட்போம். கூட்டணி தேர்தல் நெருங்கும் போது, பத்பநாதபுரம் சட்டமன்ற தொகுதி மட்டும் அல்ல வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதியை கேட்போம் என பேட்டியின் போது, காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் தெரிவித்தார்.







; ?>)
; ?>)
; ?>)