கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தையால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதியை நோக்கி உலா வருவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கோத்தகிரி அரவேனு பெரியார் நகர் பகுதியில் குடியிருப்பு அருகே சிறுத்தை சர்வ சாதாரணமாக உலா வந்தது. இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வனத்துறையினர் சிறுத்தையை கண்கானித்து கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.