அரியலூர் அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் கவிதா ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பொ.சந்திரசேகர் (முன்னாள் மாவட்ட அதிமுக வர்த்தக அணி செயலாளர் ) ஆகியோர், அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் சென்னையில் தவெக தலைவர் விஜயை நேரில் சந்தித்து, தங்களை தவெகவில் இணைத்துக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பிருந்து தவெக அரியலூர் மாவட்டச் செயலாளர் சிவா தலைமையில்,அரியலூர் நகர த .வெ.க செயலாளர் எம் எஸ் கே கார்த்திக் முன்னிலையில், த.வெ.க.வில் இணைந்த கவிதா ராஜேந்திரன், பொ . சந்திரசேகர் ஆகியோர் 500 க்கும் மேற்பட்ட த.வெ.க கட்சியினருடன் ஊர்வலமாக சென்று நகராட்சி பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா , செட்டியேரி கரை பூங்காவில் அமைந்துள்ள பகுத்தறிவு பகலவன் பெரியார், அண்ணல் அம்பேத்கர், தேசப்பிதா காந்தி,கர்மவீரர் காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்வில் த.வெ க மாவட்ட ,ஒன்றிய ,நகர, கிளைக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.





