• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்.,

ByS.Ariyanayagam

Dec 17, 2025

திண்டுக்கல்லில் வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் நுழைவாயில் முன்பாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் தலைமையில் செயலாளர் செல்வராஜ் முன்னிலையில் வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதிமன்றங்களில் E- Filing செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் 1-ம் தேதி முதல் E-Filing முறையை நடைமுறைபடுத்தியதை நிறுத்திவைக்ககோரி யும், வழக்கறிஞர் பாதுகாப்புசட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்கள் பெண் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.