• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இ பைலிங் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர்கள் பணிப் புறக்கணிப்பு..,

Byமுகமதி

Dec 9, 2025

புதுக்கோட்டையில் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் செய்தாததோடு இன்று உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டனர். இ பைலிங் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி 1215 வழக்கறிஞர்கள் பணிப் புறக்கணிப்பு செய்துள்ளனர்.

நீதிமன்றங்களில் தற்போது இ ஃபைலிங் முறை நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது. இதன் காரணமாக வழக்கறிஞர்களுக்கு வேலையில்லா நிலை ஏற்படும் என்பதோடு பொதுமக்களுக்கும் நீதிமன்றங்களில் உள்ள நடைமுறைகள் தெரியாமல் பல்வேறு குளறுபடிகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக கூறி முறையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கடந்த 4.12. 2025 அன்று பணிகள் புறக்கணிப்பு செய்ததோடு தனியார் மண்டபம் ஒன்றிலும் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து இன்று நான்காவது பணி நாளாக பணி புறக்கணிப்பு செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை அறந்தாங்கி மற்றும் உள்ள தாலுகா நீதிமன்றங்களிலும் சேவை பணியாற்றி வந்த வழக்கறிஞர்கள் 260 பெண் வழக்கறிஞர்கள், 955 ஆண் வழக்கறிஞர்கள் உட்பட மொத்தம் 1215 வழக்கறிஞர்கள் இந்த பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இன்று புதுக்கோட்டை நீதிமன்றத்தின் முன்புறம் சாலை ஓரத்தில் பந்தல் அமைத்து உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.