


நாகப்பட்டினம் நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கடந்த 2009ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி சென்னை நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை கருப்புதினமாக அனுசரிக்கும் வகையிலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகப்பட்டினம் நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் சேம நல நிதியை 10 லட்ச ரூபாயிலிருந்து 25 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும், புதிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும், தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.


