• Mon. Jul 1st, 2024

சிவகங்கையில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வழக்குரைஞா்கள் போராட்டம்

ByG.Suresh

Jun 28, 2024

சிவகங்கையில் சிவகங்கை மாவட்ட ஒருங்கினைந்த நீதிமன்றம் முன்பாக
வழக்குரைஞா்கள் மூன்று முக்கியச் சட்டங்களில் திருத்தம் கொண்டு வரும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வழக்குரைஞா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை வழக்குரைஞா்கள் சங்கத்தின் சார்பில் இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய முப்பெரும் சட்டங்களின் பிரிவுகளை முழுமையாக மாற்றி புதிய சட்டங்களாக தாக்கல் செய்துள்ளவற்றை முழுமையாக திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிா்த்தும், சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் இன்று சிவகங்கை வழக்கறிஞர்கள் ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு கவன ஈா்ப்பு கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் நடைபெற்றது சிவகங்கையில் வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டி நூதன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றியும், மசோதாவில் பல்வேறு ஷரத்துகளை புதிதாக திணித்து இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *