• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

அழகர்கோவிலில் நாள்முழுவதும் லட்டு பிரசாதம்..!

Byவிஷா

Jan 1, 2024

மதுரை அழகர்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள்தோறும் லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
திருப்பரங்குன்றம் முருகன் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், ராமேஸ்வரம், திருவண்ணாமலை போன்ற கோவில்களிலும் லட்டு பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோவில்களில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் கடந்த 2022 -ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர் இந்த திட்டம் படிப்படியாக பல்வேறு கோவில்களில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.