• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ரஜினி மனைவியால் நடுத்தெருவுக்கு வந்த ஊழியர்கள்!

By

Sep 2, 2021 , ,
Latha rajinikanth

நாற்பது வருடங்களாக சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்தியின் மரியாதை இன்று காற்றில் பறந்துள்ளது. ஒவ்வொரு படத்துக்கும் வாயை பிளக்க வைக்கும் அளவு சம்பளம் வாங்கி குவிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் தான் நடத்தும் பள்ளி ஊழியர்களுக்கு சம்பளம் தராமல் ஏமாற்றியுள்ளார்.

சென்னை வேளச்சேரியில் ஆஸ்ரம் என்ற பெயரில் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார் லதா ரஜினிகாந்த், இதில் 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதனைக் கண்டிக்கும் விதமாக லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் ஆஸ்ரம் பள்ளி வளாகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஊழியர்கள், கொரோனோ காலகட்டத்தில் தங்களுக்கான முறையான ஊதியத்தை வழங்காமல் பள்ளி நிர்வாகம் தங்களை வஞ்சிப்பதாகவும், சம்பளத்தை கேட்டால் தொடர்ந்து இழுதடிப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். தாங்கள் படும் சிரமத்தை கருத்தில் கொண்டு ரஜினிகாந்த் தன்னுடைய சொந்த பணத்திலிருந்தவது தங்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் பள்ளி ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.