• Sat. Jun 27th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

அமீர்கான் நடித்துள்ள லால்சிங் சட்டா ஏப்ரல் 14 வெளியீடு

இந்தியில் அத்வைத் சந்தர் இயக்கத்தில் அமீர்கான் தயாரித்து நடித்து முடித்துள்ள படம் லால் சிங் சட்டா. இப்டம் 1994ம் ஆண்டு வெளியாகி ஆஸ்கர் விருதுகளைக் குவித்த பாரஸ்ட் கம் என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இந்த படத்தில் அமீர்கானின் நண்பராக தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடித்துள்ளார் இவர்களுடன் கரீனாகபூர், மோனா சிங் ஆகியோர் நடித்துள்ள இப்படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக இருப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார் அமீர்கான்.

அதோடு ஏப்ரல் 14ஆம் தேதி கன்னட நடிகர் யஷ்ஷின் கேஜிஎப்- 2 படமும் வெளியாவதால் அவரிடத்தில் மன்னிப்பு கேட்டு அமீர்கான் ஒரு செய்தி வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த லால் சிங் சட்டா படம் ஏற்கனவே இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு கொரோனா தொற்று காரணமாக அதை மாற்றிக் கொண்டே வந்த அமீர்கான் தற்போது ஏப்ரல் 14ம் தேதி கண்டிப்பாக ரிலீஸ் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.