மதுரையில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.
மதுரை மேலமடை பகுதியில் உள்ள ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இத்திருவிளக்கு பூஜையில் பகுதியை சேர்ந்த பெண்கள் சிறுமிகள் உட்பட பலர் கலந்துகொண்டு திருவிளக்கு ஏற்றி வழிபட்டனர். மேலும், ராதை கிருஷ்ணருக்கு சிறப்பு தீபாரதனை பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சி ஏற்பாட்டினை நிர்வாக கமிட்டியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.