• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோவில் நிலத்தை அபகரித்தால் குண்டாஸ்

By

Sep 15, 2021

கோவில் நிலத்தை அபகரித்தவர்களுக்கு எதிராக குண்டர் சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மயிலாப்பூர் பேயாழ்வர் தேவஸ்தான கோயில்அறங்காவலர் தற்காலிக நீக்கத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ் சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அறங்காவலர் ஸ்ரீதரை தற்காலிகமாக நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து, அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்துள்ளது.
கோவில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் தாமாக முன்வந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க விளம்பரங்கள் செய்ய வேண்டும்.

கோவில் நிலத்தை அபகரித்தல் குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு, டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் கோவில் நிலம், சொத்து, நகையை மீட்கும் நடவடிக்கையை கண்காணிக்க சிறப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும். சிறப்பு பிரிவுக்கான தொலைபேசி, மொபைல் எண்களை கோயில் அலுவலகங்களில் வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.