• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கீழடியில் 18 சித்தர்கள் கோயில் கும்பாபிஷேகம்

Byp Kumar

Jan 13, 2023

மதுரை – சிவகங்கை எல்கை பகுதியில் அமைந்துள்ள கீழடியில் அமையப்பெற்ற 18 சித்தர்கள் திருக்கோவில் குடமுழக்கு விழா கோலாலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
ஸ்ரீ ல ஸ்ரீ கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் அருளாலும், 18 சித்தர்கள் ஆசியுடனும் 18 சித்தர் திருக்கோவிலில் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ பாலாம்பிகை, 18 சித்தர்கள், ஸ்ரீ சுட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் இதர சித்தர் குருமூர்த்தி களுக்கு திருப்பெருங்குட நன்னீராட்டு பெருவிழா சிவனடியார்கள், ஆன்மீக அன்பர்கள். மற்றும் கிராம பொதுமக்களின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது .


விழாவில், முன்னதாக மங்கல இசை, தமிழ் திருமறை, புனித தீர்த்த பூஜை, மற்றும் கணபதி ஹோமம், சங்கல்பம், நவகிரக ஹோமம், தனபூஜை, வாஸ்து சாந்தி, போன்றவை நடத்தப்பட்டு கும்ப அலங்காரம் செய்து வைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கின.
இதில் முதற்காலை யாகசாலை பூஜையை தொடர்ந்து இரண்டாம், மூன்றாம். நான்காம் கால யாக சாலையை தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜைகளையடுத்து எங்கும் சங்கொலி, மங்கள வாத்தியங்கள் முழங்கிட, யாக சாலையில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் குடங்கள் சகல பரிவாரங்களுடன் தலைசுமையாக கோயிலை சுற்றி வலம் வரச்செய்து, கோபுர கலசத்திற்கும் சன்னதியில் அமையப்பெற்ற சித்தர்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் கோலகலமாக நடைபெற்றது .தொடர்ந்து சித்ர்கள் மற்றும் தெய்வங்களுக்குமஹ தீபாரதனை காட்டப்பட்டதுடன்
பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கீழடி சுற்றுப்பகுதியில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று சித்தர்களை மனமுருக தரிசனம் செய்தனர் .