விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இறவார்பட்டி கிராமத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் பட்டாசு தொழிலை தொழிலாக மேற்கொண்டு வரும் இந்த ஊர் கிராமத்தினர் முத்துராமலிங்க தேவரை கடவுளாக நினைத்து வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் இரவார்பட்டியில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலை அமைந்துள்ள மணி மண்டபத்தில் கோவில் போல் அலங்கரித்து இக்கோவிலுக்கு இன்று கும்பாபிஷேக நடத்தி வழிபட்டனர்.

அதன் முதல் நிகழ்ச்சியாக உலக அமைதிக்கும் மக்கள் நல்வாழ்வுக்கும் வேண்டி சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டது அதனைத் தொடர்ந்து முத்துராமலிங்க தேவருக்கு ஊர் கிராம பொதுமக்கள் பால்குடம் எடுத்து அபிஷேகம் நடத்தி சிலையை அலங்கரித்து தீபாராதனை காட்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
பின்னர் முத்துராமலிங்க தேவரின் திருக்கோவில் கோபுர கலசத்தில் மந்திரங்கள் ஓதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் முடிந்தவுடன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அனைவரும் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர் . அதனைத் தொடர்ந்து ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் அறுசுவை உணவுடன் கூடிய அன்னதானம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு பொய்க்கால் குதிரை ஆட்டம் தேவராட்டம் காவடியாட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.













; ?>)
; ?>)
; ?>)