• Mon. Mar 24th, 2025

நாகப்பட்டினம் ஸ்ரீ சொர்ண விநாயகர்க்கு கும்பாபிஷேக விழா …

ByR. Vijay

Mar 12, 2025

நாகை ஸ்ரீ சுவர்ண விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுவர்ண விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது,
தொடர்த்து வாஸ்து சாந்தி, கோ- பூஜையுடன் யாகசாலை பூஜைகளுடன் நடைபெற்று வந்தது, தொடர்ந்து 3ஆம் கால யாகசாலை பூஜையில் ,பூர்ணாஹூதி நடைப்பெற்று கலசங்களுக்கு மகா தீபாராதனை காணிப்பிக்கப்பட்டு நிறைவு பெற்றது,

தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைப்பெற்றது. சிவாச்சாரியர்கள் புனித நீர் அடங்கிய கலசத்தை சுமந்த வந்து வேத மந்திரங்கள் முழங்க ஆலய விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் உள்ள ஸ்ரீ சுவர்ண விநாயகருக்கு சிறப்பு அபிஷேம் நடைப்பெற்று மகா தீபாரனை காண்பிக்கப்பட்டது.இந்த கும்பாபிஷேக விழாவிற்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல மாவட்டம் முழுவதும் உள்ள ஸ்ரீ சொர்ண விநாயகர் பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர்.