• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் அருகேதென்கரை சங்கையா சந்தி வீரப்பன் கோவில் கும்பாபிஷேகம்

ByKalamegam Viswanathan

Mar 10, 2023

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் உள்ள சங்கையா சந்தி வீரப்பன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் உள்ள சங்கையா சந்தி வீரப்பன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா கடந்த இரண்டு நாட்களாக யாகசாலையில் பூஜைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து இன்று காலை9.30 மணி அளவில் மதுரை கணபதி பட்டர் தலைமையில் யாகவே வேள்வி நடைபெற்று தொடர்ந்து பூர்ணாஹதியுடன் யாகசாலைகள் நிறைவு பெற்றது அதனைத் தொடர்ந்து காலை 10 மணி அளவில்திருப்பணி கமிட்டி தலைவர் பிரசன்னா மூர்த்தி செயலாளர் பரந்தாமன் பொருளாளர் நீதிவளவன் பரம்பரை பூசாரி தினகரன் ரமணன் மேளதாளத்துடன் புனித நீர் குடங்களை எடுத்து கோவிலை சுற்றி வலம் வந்தனர்

இதைத்தொடர்ந்து சங்கையா சந்திவீரப்பன் உள்பட அங்காள பரமேஸ்வரி சங்கிலி கருப்பன் சுவாமி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது இதை பார்த்த பக்தர்கள் பக்தி கோஷமிட்டனர் விழாவை முன்னிட்டு முதல் நாள் வீர விநாயகர் சங்கையா சந்தி வீரப்பன் அங்காளபரமேஸ்வரி சங்கிலி கருப்பன் ஆகிய சுவாமி சிலைகள் ஊர்வலமாக எடுத்து வந்து பிரதிஷ்டை செய்தனர் அனைவருக்கும் அன்னதான வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை சங்கையா சந்தி வீரப்பன் கோவில் திருப்பணி கமிட்டினர்..