மதுரை காமராஜர் சாலையில் உள்ள பங்கஜம் காலனியில், அக்கினி நாச்சாரம்மாள் கோயில் உள்ளது. நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலில், கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற விழாவில், மங்கல இசையுடன் சிறப்பு யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இது தொடர்ந்து யாகசாலை பூஜை முடிந்து பல புண்ணிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தங்கள் ஊற்றப்பட்டு, மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து விழாவிற்கு வருகை தந்த மதுரை, தேனி, திண்டுக்கல், வத்தலக்குண்டு, பெரியகுளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பூஜை மலர் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் பால குமரசாமி சிறப்பாக செய்திருந்தார்!






