• Mon. Apr 29th, 2024

குமரியின் புதிய இளைய 13_உரிமையில் நீதிபதிகள்.

இந்தியாவின் தென் கோடி குமரி மாவட்டத்தில் இருந்து 13 உரிமையில் நீதிபதிகளில் தேர் வானவர்களை தங்கள் வீட்டு பிள்ளைகளை போன்று, கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையில் உள்ள அனைத்து மத மக்களும் மதம் கடந்து உரிமையோடு அவர்கள் வீட்டு மகள் அல்லது மகன் நீதித்துறையில் உரிமையில் நீதிபதிகளாக தேர்வான இளம்பெண்கள், இளைஞர்களை உச்சி முகந்து உவகை கொள்கிறார்கள்.

கன்னியாகுமரியில் விடுதலைப் போராட்டதில் சிறையில் அடை பட்டு சுதந்திர வேள்வியில் ஈடுபட்டவர் தியாகி ஏ.பி.வாஸ் இவரது மருகன் கெய்சர். பின்னாளில் குமரி முனை கெய்சர் என்று தி மு க வினரால் கொட்டப்பட்டு, இளைஞராக தி மு க வில் சேர்ந்தவர், அவரது இறுதி மூச்சு வரை கலைஞரின் தொண்டராக இருந்து மறைந்தார்.

குமரி முனை கெய்சரின் மகன் அழகன் தம்பதியர்களின் தலைமகள் ‘மிதுனா அழகன் கெய்சர்’ உரிமையில் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி ஒரு பெண் தெய்வத்தின் பெயர் கொண்ட மாவட்டத்தில் ஒரு இளம் பெண் உரிமையில் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்ட செய்தி பரவியதும், நீதிபதி மிதுனா அழகன் கெய்சரை உறவுகள், ஊரார்,அனைத்துக்கட்சியினர் உற்சாகம் பொங்க நேரில் வாழ்த்தி பொன்னாடை அணிவித்து அவர்களது மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.

குமரியின் மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்,குமரியை சேர்ந்த ராஜ்கோமஸ், முன்னாள் வார்ட் உறுப்பினர் தாமஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொறுப்பாளர்கள் உடன் அழகன் இல்லத்திற்கு சென்று, இளம் உரிமையில் நீதிபதியான மிதுனா அழகன் கெய்சர் தேர்வு ஆனதற்கு,குமரி மக்களவை உறுப்பினர் அவரது மகிழ்ச்சியையும், வாழ்த்தையும் நேரில் நீதிபதியின் வீட்டிற்க்கு சென்று பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *