கடந்த மூன்று நாட்களாக உணவில்லாமல் வீட்டினுள் முடக்கியிருந்த 85 வயது மூதாட்டியை மீட்ட, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R. ஸ்டாலின் IPS அவர்களின் நிமிர் குழு (The Rising Team)*

- இரணியல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட குருந்தன்கோடு அருகே வியாகுல மேரி என்கிற வயது 85 மூதாட்டி அவர்களுக்கு ஒரு மகள் இறந்து விட்டநிலையில், மற்றொரு மகள் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
- இதனால் கவனிப்பாரன்றி மூதாட்டி தனிமையில் அவதிப்பட்டார்.
- மூன்று நாட்கள் வீட்டினுள் இருந்த மூதாட்டி பசியினால் சத்தம் போட ஆரம்பித்துள்ளார்.
- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் குளச்சல் உட்கோட்ட நிமிர் குழுவினற்கு கிடைத்த தகவல் கிடைத்தது.
- நிமிர் குழு ஊர்மக்கள் உதவியுடன் மூதாட்டியை மீட்டு, மேக்காமண்டபம் பகுதியில் செயல்படும்
- கிறிஸ்த்தவ அருட்கன்னியர்கள்
- நடத்தும் முதியோர் இல்லத்தில் கொண்டு சேர்த்தனர்.
- ஆதரவற்றிருந்ந
- மூதாட்டி ஒரு பாதுகாப்பான கரங்களில்
- இருப்பதை உணர்ந்து
- மன அமைதி பெற்றாள்.





