Kanyakumari Speaks English என்ற திட்டத்தின் மூலமாக கடந்த 2023-ம் ஆண்டு முதல் குமரி மாவட்டத்தின் 59 அரசுப்பள்ளிகளில் – 6100 மாணவர்களுக்கு எனது தனிப்பட்ட முயற்சியில் குட் விஷன் அறக்கட்டளை மூலமாக ஆங்கில மொழி பேச்சுப்பயிற்சி அளித்து வருகிறேன். இது தவிர சென்னையிலும் 2023-2024 கல்வியாண்டில் 5 அரசுப்பள்ளிகளில் Chennai Speaks English என்ற திட்டம் மூலம் ஆங்கில பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இதே போன்று நமது தொன்மையான களரி தற்காப்பு கலையை மீட்டெடுக்கும் வகையில், குமரியில் 650 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு களரிக்கலை இலவசமாக பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.
இம்முயற்சியை பாராட்டி விருது அளித்தது மகிழ்ச்சியளிக்கிறது. நீதியரசர் சந்துரு- விடம் இருந்து பெற்ற இவ்விருதினை எனது பத்மநாபபுரம் தொகுதி மக்களுக்கும், GV – Kanyakumari Speaks English திட்டத்தின் நிர்வாக மற்றும் தன்னார்வலர் ஆசிரியர் குழுவிற்கும், களரி பயிற்சியாளர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.
இத்திட்டத்திற்கு உதவி செய்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் எனது
உணர்வு பூர்வமான நன்றிகள் என அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.








