

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக குமரி சங்கமம் பொதுக்கூட்டம் நடைபெற்றது
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது..,
அமைச்சர் செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த நிலையில், அவரை கைது செய்தபோது ஓடோடி சென்றார்கள். அரசு எந்திரங்கள் அனைத்தும் அவருக்காக வேகமாக செயல்பட்டது. மோடியை எதிர்ப்பதாக கூறி களவாணிகள் கூட்டம் சேர்ந்திருக்கிறார்கள். பாட்னா கூட்டத்தில் பேசிய முக்கிய நபரான சரத் பவாரின் கட்சியை சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்து விட்டனர். எனவே, மோடி தான் மீண்டும் பிரதமர். ஜூலை 11ம் தேதி எதிர்கட்சிகளின் கூட்டத்திற்காக பெங்களூருவுக்கு செல்லும் ஸ்டாலின், காவிரி தண்ணீரை தர மாட்டேன் என கூறிய துணை முதல்வர கூறிய பிறகு எதற்காக செல்கிறார்.
2004ல் அமைச்சரவையை கூறு போட்டார்கள். வாய் பேச தெரியாத மன்மோகன் சிங்கை பிரதமராக்கினார்கள். அதே போல் 2024லும் நடத்த திட்டமிட்டுள்ளார்கள. ஆனால், மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். சரத்பவாரின் எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர்ந்ததை போல் திமுக எம்எல்ஏக்களும் பாஜகவில் இணைய வேண்டுமா? பொது சிவில் சட்டம் வேண்டும் என நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் பேசியுள்ளார்.
பிரதமர் மோடி தான் மீன்வர்களின் தந்தை. காரணம், மீனவர்களுக்கு முதன்முதலாக தனி அமைச்சரவை. இணை அமைச்சராக தமிழகத்தை சேர்ந்த முருகன். பொன்னாரும் பிரதமரும் மதுரையில் எய்ம்ஸ் திட்டத்தை கொண்டு வந்தார்கள். ஜப்பான் ஜிக்கா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து டெல்லி தரத்தில் திட்டம் 2026 மார்ச்சில் மதுரை எய்ம்ஸ் கட்டிடம் திறக்கப்படும்
மோடி நாடாளுமன்றத்தின் முன்பு படுத்து வணங்கிய காட்சியை கிண்டல் செய்த அமைச்சர் மனோதங்கராஜை கடலில் கயிற்றினால் கட்டி போட்டால் கூட கடல் ஏற்றுக் கொள்ளாது. மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் திமுக தேர்தல் வாக்குறுதி எண் 153 என்னாச்சு..? என்று கேள்வி எழுப்பி அண்ணாமலை செங்கலை தூக்கி காட்டி திமுகவினருக்கு பதிலடி கொடுத்தார்
குமரி சங்கமம் நிகழ்ச்சிக்கு குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து பாஜகவினர் கலந்து கொண்டனர்


