• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோலாகலமாக நடைபெற்ற குமாரி ஜனனியின் பரதநாட்டிய அரங்கேற்றம்…

Byஜெ.துரை

Nov 27, 2023

பண்டைய இந்திய பாரம்பரிய நடன வடிவமான பரதநாட்டியம்,கதை சொல்லும் கலையுடன் தீவிர உடல் அசைவுகளை உள்ளடக்கிய ஒரு கலை வடிவமாகும். இந்த அழகிய கலை வடிவத்தை பாதுகாக்கும் பணியில் பல மூத்த கலைஞர்களோடு, இளைய தலைமுறையினரும் இணைந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், பெருநகர் காஞ்சிபுரத்தை சொந்த ஊராக கொண்ட செல்வி ஜெ.ஜனனி தற்போது பெங்களூரில் வசித்து வந்தாலும், பரதநாட்டிய கலையை முறையாக கற்றுக்கொண்டதோடு, பல வருடங்கள் அக்கலையில் பயிற்சி பெற்று தற்போது தனது அரங்கேற்றத்தை சென்னையில் நடத்தி அனைவருடைய பாராட்டையும் பெற்றுள்ளார்.

பெங்களூரில் உள்ள ’நந்தினியின் 9 வது கவுண்ட் டான்ஸ் அகாடமியில், குரு ஸ்ரீமதி நந்தினி வசந்த் அவர்களிடம் பரதம் பயின்ற ஜனனியின் அரங்கேற்றம்
சென்னை, தி.நகரில் உள்ள கிருஷ்ண கான சபாவில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், திரைப்பட இயக்குநரும் நடிகருமான கலைமாமணி அபிஷேக் சங்கர், வாசுதேவன் நத்தலாயாவின் நிறுவனர் மற்றும் இயக்குனர் துளசி வி.இ.ஆர். செல்வ லட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

தனி பாடல்களுக்கு சிறப்பாக நடனம் ஆடிய ஜனனியின் திறமையை விருந்தினர்கள் மட்டும் இன்றி நிகழ்ச்சியை காண வந்த பார்வையாளர்களும் பாராட்டினார்கள்.