• Fri. Jan 24th, 2025

குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி பேரூந்துகளை ஆய்வு செய்த குமரி மாவட்டம் ஆட்சியர் ஸ்ரீதர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் தனியார் பள்ளி வாகனங்களின் இயக்க தன்மை, இருக்கைகள், முதல் உதவி மருத்துவ பெட்டி இவைகள் முறையாக உள்ளதா என பள்ளி, கல்லூரி வாகனங்களை.

குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், மாவட்டம் போக்குவரத்து துறை அதிகாரி உடன் கொட்டும் மழையில் இன்று காலை ஆய்வினை மேற்கொண்டார். அப்போது பல வாகனங்களில் மாணவர்கள் அமர்ந்து செல்லும் இருக்கைகள் ஒழுங்கு நிலையில் பராமரிப்பு இல்லாது இருந்ததையும், முதல் உதவி மருந்து பெட்டி இல்லாமல் இருந்ததை பார்த்த மாவட்ட ஆட்சியர் இது குறித்து கண்டனம் தெரிவித்ததுடன், முறையாக மாணவர்கள் அமரும் தன்மை இல்லாத இருக்கைகள் இருந்த வாகனத்திற்கு இயக்க சான்றை மறுத்ததுடன் பள்ளிகள் திறக்கும் தினமான ஜீன் 10_ம் தேதிக்குள் முறையாக செப்பனிட்டு ஜீன் 7_ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வாகன போக்குவரத்து அலுவலக அதிகாரியிடம் காண்பித்து தகுதி சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.