கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., தோவாளை – துவச்சி பகுதியில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் நிரந்தர தீர்வு காணும் பொருட்டு நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டதோடு, தோவாளை சானல் பணிகள் வரும் செவ்வாய்க்கிழமை அன்று முடிக்கப்பட்டு, புதன்கிழமை அன்று தண்ணீர் திறந்து விடப்படும் என தெரிவித்தார்கள். ஆட்சியரின் அறிவிப்பு அப்பகுதி விவசாயிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








