• Tue. Jan 20th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு

குமரி காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலின் பாராட்டைப் பெற்ற
காவல் பணியாளர்கள்.

மாண்புமிகு தமிழக முதல்வர் பாதுகாப்பு பணி, பொங்கல் பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.இரா.ஸ்டாலின் IPS தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆயுதப்படையில் வைத்து இன்று 22-01-2025 நடைபெற்றது.

முதல்வர் பாதுகாப்பு பணி,பொங்கல் பாதுகாப்பு அலுவல்களில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார்கள். குற்றம் நடப்பதற்கு முன்பாகவே தடுப்பதற்கு முன்னுரிமை கொடுத்து செயலாற்ற வேண்டும், நீதிமன்ற விசாரணையில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதற்கு முன்னுரிமை கொடுத்து செயலாற்ற வேண்டும். ஏற்கனவே திருட்டு குற்றங்கள் நடந்த இடங்களை பகுப்பாய்வு செய்து, தொடர்ந்து திருட்டு குற்றங்கள் நடக்கும் இடங்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். புலன் விசாரணை அதிகாரிகள் தங்கள் தொழில்நுட்ப அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்கள்.

இந்த கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், மேலும் மருத்துவத்துறை, குழந்தைகள் நல அலுவலர், அரசு குற்ற வழக்கறிஞர்கள் உட்பட அனைத்துதுறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.