• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்ட கே.டி.ஆர்..,

ByK Kaliraj

Jan 8, 2026

விருதுநகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டு கிருஸ்தவ மக்கள் முன்னிலையில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி,

கிருஸ்துவர்களுக்கு என்றைக்கும் துணையாக இருப்பேன், நீங்களும் உங்களில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் அரசியலில் ஏற்படும் கூட்டணிகள் கொள்கைரீதியான கூட்டணி கிடையாது.

சூழ்நிலை சந்தர்ப்பத்திற்காகவும், வாக்குகளுக்காக ஏற்படுத்தக்கூடிய கூட்டணி அதிமுகவிற்கு என ஒரு கொள்கை உள்ளது, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் கிருஸ்தவர்களை தங்களது அங்கமாக வைத்திருந்தார்கள்.

அதிமுகவையும் கிறிஸ்தவ மக்களையும் எந்த கூட்டணியாலும் பிரிக்க முடியாது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2011ல் கன்னியாகுமரி மாவட்டம் அருமனை தேவாலயத்தில் பிரார்த்தனையில் கலந்து கொண்டதால் மாபெரும் வெற்றி பெற்றார்.

கிருஸ்துவர்களின் வாயிலிருந்து வன்முறை என்ற வார்த்தை கூட வருவதில்லை இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராஜேந்திர பாலாஜி, வெற்றி பெறக்கூடிய அளவிற்கு கூட்டணியை எடப்பாடி பழனிச்சாமி அமைப்பார். அதற்கான வாசல் திறந்துள்ளது.

பல அற்புதங்களை தனது சாதுர்யமான நடவடிக்கை மூலமாக செய்து வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேர்பார்.

அதிமுகவில் செயல்பட கூடிய, நிர்வாகத்தில் உள்ள யாரும் எடப்பாடி பழனிச்சாமியை விட்டு தவெகவிற்கு செல்ல மாட்டார்கள்-செங்கோட்டையன் அதிமுகவைச் சேர்ந்த பலரும் தவெகவில் இணைவதாக கூறிய கருத்திற்கு பதில்

விஜயகாந்தின் முடிவை பின்பற்றி தேமுதிக அதிமுக பக்கம்தான் வருவார்கள்

மறையும் வரை திமுகவை எதிர்த்தவர் விஜயகாந்த், திமுக ஆட்சியை விரட்ட வேண்டும் என்பதற்காகத்தான் தேமுதிகவை உருவாக்கியவர். விஜயகாந்த் மீது அன்பு கொண்ட பிரேமலதா, விஜயபிரபாகரன் அவரது கொள்கைக்கும், எண்ணங்களுக்கும் எதிராகவோ நிச்சியம் செயல்பட மாட்டார்கள்.

நிச்சியம் அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வரும்

கரூர் சம்பவத்தில் விஜயை மிரட்டவே சிபிஐ சம்மன் அனுப்பியிருக்க வாய்ப்பில்லை

கரூர் சம்பவம் நடந்தபோது சம்பவ இடத்தில் விஜய் இருந்ததன் அடிப்படையில் சிபிஐ அவரை விசாரிக்க சம்மன் அனுப்பி இருக்கலாமே தவிர பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்க வாய்ப்பில்லை.

அப்படி இருந்தால் அதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் திமுக காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு கிடையாது கருத்து மோதலே ஏற்பட்டுள்ளது.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என மாணிக்கம் தாகூர் பகிரங்கமாக குரல் கொடுத்துள்ளார்.

மாணிக்கம் தாகூர் கருத்தை சொந்த கருத்து என அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறினாலும் தான் கூறிய கருத்து ராகுல்காந்தி அனுமதி பெற்றே பேசியதாக மாணிக்கம் தாகூர் கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் திமுக இடையே இன்னும் பலமான கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது, திமுக காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்படும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது

தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சி வரும் என அமித்ஷா கூறியிருக்கிறார்

தமிழகத்த்தை பொறுத்தவரை தனிக்கட்சியின் பெரும்பான்மையான ஆட்சிதான் அமையும் தமிழக மக்கள் தனிப்பெரும்பான்மையான ஆட்சியைத்தான் விரும்புவார்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக தனி பெரும்பான்மை பெற்று தனித்து ஆட்சியமைக்கும்.

அதற்கான நடவடிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி இறங்குவார் தமிழக மக்களும் சிக்கல் இல்லாத, சிரமம் இல்லாத பெரும்பான்மையான ஆதரவை அதிமுகவிற்கு வழங்குவார்கள்.

எந்த தேர்தலிலும் அதிமுகவிற்கு கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் வந்ததில்லை, இனிமேலும் வாராது தனி பெரும்பான்மையுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைப்பார்.