விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிவீரன்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீகாளியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் கட்டுமான திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.

கோவிலின் கட்டுமானப் பணிக்கு நிதி உதவி வழங்க வேண்டுமென கோவில் நிர்வாக கமிட்டி சார்பில் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே டி. ராஜேந்திர பாலாஜியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
அதனை ஏற்று கோவில் திருப்பணிகள் சிறப்பாக நடைபெற
ரூ1இலட்சம் நிதியுதவி வழங்கினார்.

ரூபாய் ஒரு லட்சம் நிதி வழங்கியதற்கு கோவில் திருப்பணி கமிட்டி சார்பில் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜிக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வின்போது கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.