சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த அஜித்குமாருக்கு நீதி வேண்டி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அஜித் குமார் தலைமையில் “ஜஸ்டிஸ்பார் அஜித்குமார் ” என்ற பதாகையை கையில் ஏந்தி மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது .

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பகுதியில் உள்ள கோயில் காவலாளி அஜித்குமார் என்பவர் போலீசாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் உயிரிழந்த அஜித்குமாருக்கு நீதி வேண்டி விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி ராஜேந்திரபாலாஜி தலைமையில் அதிமுகவினர் ” ஜஸ்டிஸ் பார் அஜித்குமார் “என்ற வாசகம் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தி தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.
