

சிவகாசியில் தியாகி இமானுவேல் சேகரன் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
இம்மானுவேல் சேகரனின் 65-வது குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகாசி அருகே பெரியபொட்டல்பட்டியில் தியாகி இம்மானுவேல் சேகரன் திருவுருவச் சிலைக்கு அதிமுக கழக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினார். முன்னதாக சிவகாமிபுரம், மாரனேரியில் வைக்கப்பட்டிருந்த இம்மானுவேல் சேகரனின் திருவுருவ படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். பெரியபொட்டல்பட்டியை சேர்ந்த…கிருஷ்ணகுமார் – ரோஷினி தம்பதியினருக்கு பிறந்த பெண்குழந்தைக்கு ஜெயலட்சுமி என பெயர் சூட்டி மகிழ்ந்தார்.


நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன், முன்னாள் அமைச்சர் இன்பதமிழன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளராக வேண்டுராயபுரம் சுப்பிரமணி, சிவகாசி மண்டல செயலாளர்கள் சரவணகுமார், கருப்பசாமிபாண்டியன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேஷ், கருப்பசாமி, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜயஆனந்த், மாநகராட்சி கவுன்சிலர் கரைமுருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் எம்.கே.என்.செல்வம், சிவகாசி கிழக்கு ஒன்றிய பொருளாளர் கருப்பசாமிபாண்டியன் மற்றும் பள்ளபட்டி ரமேஷ், பிரியா, சசி மலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
