திருத்தங்கல் கிழக்கு மற்றும் மேற்கு பகுதி கழகம் சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுதினம் அனுசரிப்பு
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
திருத்தங்கல்லில் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவும் அமைச்சர் கே.டி ராஜேந்திரபாலாஜி தலைமையில் அனுசரிக்கப்பட்டது .


திருத்தங்கல் கிழக்கு மற்றும் மேற்கு பகுதி கழகம் சார்பாக காளிமுத்து நகர் மற்றும் மேலரதவீதி பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர்,முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திபாலாஜி மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பு நிகழ்த்தினார்…
இந்நிகழ்வின்போதுசிவகாசி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ்.பி. வெங்கடேஷ் , திருத்தங்கல் கிழக்கு பகுதி கழக செயலாளர் எம்.பி. கிருஷ்ணமூர்த்தி ,திருத்தங்கல் மேற்கு பகுதி கழக செயலாளர் வி. சரவணக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர் .
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)