• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

15ஆம் ஆண்டு நினைவு தினத்தில் கொட்டும் மழையில் கிருஷ்ணசாமி அஞ்சலி…

ByP.Thangapandi

Nov 4, 2023

உசிலம்பட்டி அருகே கொட்டும் மழையில் தனது கட்சி நிர்வாகியின் 15ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு – அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து டாக்டர் கிருஷ்ணசாமி மரியாதை செலுத்தினார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்புரம் கிராமத்திற்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி வந்து சென்ற போது ஏற்பட்ட கலவரத்தில் இ.கோட்டைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற புதிய தமிழகம் கட்சி நிர்வாகி உயிரிழந்தார்.

கலவரத்தில் உயிரிழந்த புதிய தமிழகம் கட்சி நிர்வாகியான சுரேஷ்-ன் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வரும் சூழலில் 15 ஆண்டுகளுக்கு பின், இன்று 15வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி இ.கோட்டைப்பட்டிக்கு கொட்டும் மழையில் வருகை தந்து சுரேஷ்-ன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அந்த கிராமத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்த டாக்டர் கிருஷ்ணசாமிக்கு கிராம மக்கள் மற்றும் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் கொட்டும் மழையிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து பாதுகாப்பு கருதி உசிலம்பட்டி டி.எஸ்.பி. நல்லு தலைமையில் சுமார் 200க்கும் அதிகமான போலிசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.