விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சுற்று பகுதியில் 2026 தேர்தலை ஒட்டி மக்களை சந்தித்து வரும் புதிய தமிழக கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி இருக்கங்குடி மக்களை சந்தித்து பேசியபோது இருக்கங்குடி மாரியம்மன் கோவில் பகுதி நத்தத்துப்பட்டி கிராமத்திற்கு சொந்தம் என்று சொல்லிவரும் கிராமத்து மக்களை எதிர்த்து தேவேந்திர குல மக்களே ஒன்று திரட்டி நமது கிராமத்திற்கு மாற்றுவதற்கு பெரும் போராட்டம் போராட வேண்டும் அதற்கு நீங்கள் இருக்கங்குடி கிராமத்தில் மொத்தம் 1800 ஓட்டுகள் உள்ளன அதில் நமது தேவேந்திர குல வேளாளர்கள் ஓட்டு 1,300 ஓட்டுகள் இருக்கின்றன..

இவர்கள் அனைவரும் நாங்கள் அனைவரும் உங்கள் பின்னால் தான் வருவோம் என்று தங்களுடைய ஆதார் கார்டு நம்பர் போன் நம்பர் எழுதி கையெழுத்து போட்டு என்னிடம் கொடுத்தால் மட்டுமே உங்களுக்கு நான் உதவுவேன் இல்லை என்றால் மற்றவர்களிடம் நீங்க சென்று இந்த பிரச்சனையை பார்த்துக்கலாம் என்று மக்களிடம் அதட்டும் தன்மையில் பேசினார்..

மேலும் திமுக அதிமுக ஜான்பாண்டி அந்த பாண்டி இந்த பாண்டி எந்த பாண்டி வந்தாலும் யார் பின்னாலும் போக மாட்டோம் என்று உறுதி அளித்தால் மட்டுமே இது வந்து தொடரும் இல்லை என்றால் யாராவது பின்னால் போவதாக தெரிந்தாலும் இந்த பிரச்சினையில் இருந்து நான் பின்வாங்கி விடுவேன் என்று தெரிவித்தார்.