விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் கிருஷ்ணர் கோவில் உள்ளது.
கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், திரவிய பொடி, உள்ளிட்ட 21 அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை, மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து பக்தர்கள் பஜனை பாடல் நிகழ்ச்சி அதனை தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து விட்டு சாமி தரிசனம் செய்தனர்.