• Fri. Mar 6th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி விழா மற்றும் விளையாட்டு விழா !

BySeenu

Mar 6, 2026

கோவையில் கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி தின விழா மற்றும் விளையாட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் மாணவர் சங்க தலைவர் தோம்னிக் லித்வினா வரவேற்று பேசினார்.

விழாவுக்கு கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலாளரும் இயக்குனருமான டாக்டர் சி.ஏ.வாசுகி தலைமை தாங்கி பேசினார். கல்லூரியின்
முதல்வர் டாக்டர் வி.சங்கீதா ஆண்டு அறிக்கை வாசித்தார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு டாக்டர் எம். ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷைய்யன் கலந்து கொண்டு விழாவை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கி பேசினார்.

விழாவில் மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்சிகள் நடைபெற்றது விழாவில் அனைத்து துறை மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
முடிவில் மாணவர் சங்க செயலாளர் பவன் கிருஷ்ணன் நன்றி கூறினார்.