தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள தனியார் கலை கல்லூரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாபெரும் கோலம் போட்டி மற்றும் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தக் கோல போட்டியில் கல்லூரியில் பயிலும் மாணவிகள், முன்னாள் மாணவிகள், மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பாரம்பரியம் மற்றும் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் தங்கள் கைத்திறனை வெளிப்படுத்தி கோலப் போட்டியில் பங்கேற்றனர்

பட்டுப் புடவை வடிவில் கோலமிட்டும், சமாதானத்தை பிரதிபலிக்கும் வகையில் இரட்டைப் புறாக்கள், பெண்கள் பொங்கல் வைப்பது போன்ற பலவிதமான கண்ணைக் கவரும் வகையில் பெண்கள் கோலமிட்டு தங்கள் திறனை வெளிப்படுத்தி அசத்தினர்
பெண்கள் இட்ட கோலங்களை படைப்பாற்றல், பாரம்பரியம் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்து நடுவர்கள் மதிப்பெண் வழங்கி வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது மேலும் கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது

தொடர்ந்து தனியார் கல்லூரியில் 2009 ஆம் ஆண்டு முதல் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி ஏராள முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.




