• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

கே.ஜி.எப்-2, பீஸ்ட்-க்கு போட்டியில்லை.! – யாஷ்!

கேஜிஎஃப்-2. படத்தை பிரசாத் நீல் இயக்கியுள்ளார். யாஷ், ராக்கி பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதீரா என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். மேலும் ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ் போன்ற பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 14- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்திற்கான ட்ரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் கேஜிஎப் வெளியாகும் ஒரு நாளிற்கு முன்பு அதாவது ஏப்ரல் 13-ஆம் தேதி விஜய் நடிப்பில் பீஸ்ட் வெளியாகிறது. இதனால் சமூக வலைத்தளத்தில் பீஸ்ட் vs கேஜிஎப் என ரசிகர்கள் கூறிவருகிறார்.

மேலும், இதுகுறித்து இப்படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவில் நேற்று பேசிய யாஷ், ” பீஸ்ட் vs கேஜிஎப் சொல்லாதீங்க …பீஸ்ட் & கேஜிஎப் சொல்லுங்க..போட்டியிடுவதற்கு தேர்தல் அல்ல, சினிமாவை கொண்டாடுவோம். இரண்டு படங்களும் ரசிகர்களுக்கு பிடிக்கும்..நானும் பீஸ்ட் பார்க்கிறேன்..நீங்களும் கேஜிஎப் பாருங்க” என கூறியுள்ளார்.