• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

முஸ்லிம்கள் நடத்தும் ஓட்டல் குளிர்பானங்களில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுகிறது- கேரள மூத்த அரசியல் தலைவர் குற்றச்சாட்டு

ByA.Tamilselvan

May 1, 2022

இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்ற சதி நடக்கிறது.முஸ்லிம்கள் நடத்தும் ஓட்டல்களில் பரிமாறப்படும் குளிர்பானங்களில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுகிறது. என கேரளாவின் மூத்த அரசியல் தலைவர் பி.சி. ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் கோட்டயம் மாவட்டம், பூஞ்சார் பகுதியை சேர்ந்தவர் பி.சி. ஜார்ஜ் (70). காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு அவர் மாறியுள்ளார். 2019-ல் கேரள ஜனபக்சம்என்ற கட்சியை தொடங்கி, கடந்தநாடாளுமன்ற தேர்தலில் பாஜகவோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டார். 7 முறைஎம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் கேரளாவின் மூத்த அரசியல் தலைவராக உள்ளார்.
திருவனந்தபுரத்தில் இந்து மகா சம்மேளன மாநாட்டில் பி.சி.ஜார்ஜ்பேசியபோது…
“முஸ்லிம்கள் நடத்தும் ஓட்டல்களில் பரிமாறப்படும் குளிர்பானங்களில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுகிறது. இதனால் ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும். இதன்மூலம் மற்ற சமுதாயத்தின் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி, முஸ்லிம்களின் மக்கள் தொகையை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்ற சதி நடக்கிறது.இந்து, கிறிஸ்தவ பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை. அவர்கள் குடும்ப கட்டுப்பாட்டை கடைபிடிக்கின்றனர். ஆனால் முஸ்லிம் பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்கின்றனர். அவர்களுக்கு போட்டியாக இந்து, கிறிஸ்தவ பெண்களும் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். இப்போதே இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்க வேண்டும்.
பி.சி. ஜார்ஜின் கருத்து கேரள அரசியலில் பெரும் விவாத பொருளாகி உள்ளது. அவருக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் சார்பில் காவல் துறை, முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்களும் ஜார்ஜின் கருத்துகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.