• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

கோத்தகிரியில் மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு கேரளா ரதம்

ByG. Anbalagan

Apr 27, 2025

கோத்தகிரியில் மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு கேரளா ரதம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கடைவீதி, மாரியம்மன் கோவில் திருவிழாவினையொட்டி, கேரள பாரம்பரிய ரதங்களின் பிரமாண்ட ஊர்வலம் இன்று நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு சமுதாய மக்களின் உபயத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பல்வேறு வாகனங்களில் வீற்றிருந்து திருவீதி உலா வரும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கோத்தகிரி மலையாளிகள் சங்கத்தின் சார்பில் கோத்தகிரி டானிங்டன் கருமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கேரளா பஞ்ச வாத்தியம், தாலப்பொலி, சிங்காரி மேளம், செண்டை மேளம், பல்வேறு கடவுள்களின் வேடமணிந்த கலைஞர்களின் நடனத்துடன், இசைக்கருவிகள் முழங்க அலங்கார ரதங்கள் ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்துக்கு முன்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் கேரள பாரம்பரிய உடை அணிந்து தாலம் ஏந்தியவாறு சென்றனர். இந்த ஊர்வலமானது டானிங்டன், காமராஜர் சதுக்கம், ராம்சந்த் சதுக்கம், மார்கெட் திடல், பஸ் நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கடைவீதி மாரியம்மன் கோவிலை அடைந்தது இந்த திருவிழாவில் 1000 -க்கும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.