தெய்வத்தின் பூமி என போற்றப்படும் கேரள மாநிலத்தில் அரசின் போக்குவரத்துதுறை சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பேருந்தின் மேல் பகுதி திறந்த வெளி இருக்கை கொண்ட சிறப்பு சுற்றுலா பேருந்துகளை அண்மையில் அறிமுகப்படுத்தியது.
கேரள அரசின் சுற்றுலா துறையின் சார்பில், இயக்கப்படும் சிறப்பு, நவீன சுற்றுலா பேருந்து உலக சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்த்துள்ளதாக, கேரள சுற்றுலா துறையை சேர்ந்த அதிகாரி தெரிவித்தார்.

நவீன பேருந்து கீழ் பகுதியிலும், மேல் பகுதி இருக்கைகள் வசதிகளை போன்ற பேருந்தின் மேல் திறந்த நிலையில் இருக்கைகளை கொண்டது. பேருந்து பயணத்தின் போது மேல் புறம் திறந்த வெளி பகுதியில் இருந்து சாலைகளை, வேகமாக மரங்கள் பின் நோக்கி ஓடுவது போன்ற காட்சிகளுடன், வான்மேக கூட்டங்கள் பல வடிவங்களில் ஊர்வலம் செல்வது போன்ற காட்சிகளை பார்த்தது புதுமையாக இருந்ததை பயணித்த பயணிகளின் அனுபவமாக இருந்ததாம்.

திருவனந்தபுரத்தில் உள்ள முக்கிய மூன்று மத கோவில்கள், புகழ்பெற்ற சர்வதேச சுற்றுலா பகுதியான கோவளம் கடற்கரை. கேரள அரசின் நிர்வாக கட்டிடங்கள், திருவிதாங்கூர் மன்னர் பரம்பரை வசித்த பகுதிகளின், மன்னர் குடும்பத்தின் இன்றைய வாரிசுகளின் குடியிருப்பு பகுதிகள் சுற்றுலா பயணிகள் பார்க்கும் இடமாக உள்ளது. குழுவாகவும்,தனி நபரும் பயணிக்கு வகையிலும், பயண தினத்தன்று அல்லது முன் கூட்டிய பதிவு வசதிகளும் உள்ளது.
இந்திய சுற்றுலா பயணிகளை மட்டும் அல்லாது உலக சுற்றுலா பயணிகளையும், கேரள அரசின் சுற்றுலா துறையின் இந்த சுற்றுலா பேருந்து ஈர்த்துள்ளது.
